என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர் வெள்ளோட்டம்"
- ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
- தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் ராமாயண கால புராண வரலாறு கொண்ட சிறிகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.
அரசர் காலத்தில் இருந்து தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி போன்ற நான்கு நாட்டைச் சேர்ந்த சுமார் 170 கிராமங்களை சேர்ந்த வர்களுக்கு தலைமைக் கோவிலாக இந்த கோவில் விளங்கியது. இக்கோவில் தேரோட்டம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் தேர்வடம் பிடித்து இழுப்பதில் கருத்து 1998-ம் ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006-ம் ஆண்டு வரை தேரோட்டம் நடை பெற்றது.
கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்த வில்லை. இதையடுத்து பல லட்சம் செலவில் புதிய தேர் தயார் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடத்தப் படவில்லை, ஒவ்வொரு முறையும் வெள்ளோட்டம் நடக்க முற்படும் பொழுது ஒவ்வொரு காரணங்களால் தடைபட்டது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தேர் வெள்ளோட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.
பல்வேறு தடைகளை தாண்டி ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் புதிய தேர் மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறப்பு யாக வேள்விகளும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. தொடர்ந்து காலை 6.10 மணிக்கு கோவில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடந்தது. தேரை அறநிலை துறை பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வடம் பிடித்து இழுத்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து அறநிலை பணியாளர்கள் வர வழைக் கப்பட்டு இருந்தனர். தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தேர் நகன்றதும் அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கண்ணீர் மல்க சொர்ணமுர்த்தீஸ்வரா ... என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் முன்பும், வழித்தடத் திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கண்டதேவி தேர் வெள்ளோட்டத்தை காண சுற்றி உள்ள கிராமங்களி லிருந்து ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். அவர் கள் தீவிர சோதனைக்கு பின் தேர் வெள்ளோட்டத்தை காண அனுமதிக்கப்பட்னர்.
தேர் வெள்ளோட்டத்தை காண வந்த பக்தர்கள் இந்த வெள்ளோட்டத்தை போல தேரோட்டமும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.
#WATCH | Tamil Nadu: Swarnamurtheeswarar temple chariot trial run held in Kandadevi village. pic.twitter.com/55ip6zYYoG
— ANI (@ANI) February 11, 2024
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரில் மிகப் பழமையான சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
இங்கு மூலவர் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பர்வதவர்தினி சமேத ராமநாதார், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது.
இதற்கிடையே இந்த கோவிலுக்கு சிறிய அளவிலான தேர்செய்திட தீர்மானிக்கப்பட்டது இதற்காக பக்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய திருப்பணிகுழு அமைக்கப்பட்டது.
நன்கொடையாளர்கள் உதவியுடன் தேர்செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். இந்தப் பணியை மதுரை மணிகண்ட ராஜா தலைமை யிலான ஸ்தபதிகள் ஈடுபட்டனர்.
ரூ.25 லட்சம் மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடையில் வெக்கை தேக்கு மரத்தினால் தேர் செய்யப்பட்டு இதற்கான வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். தொடர்ந்து 4 மாடவீதி களிலும்தேர் பவனி வந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோபி, திருப்பணி குழு தலைவர் வேலு உள்பட கோவில் நிர்வா கிகள், நகரமன்ற உறுப்பி னர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
- தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே கரம்பக்காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு புதிய ேதர் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் 4 வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதையடுத்து கோவில் திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல் நடைபெற்றது. தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அம்மாபாளையம் கிராமத்தில் புதிய தேர்
- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்
கண்ணமங்கலம்:
வேலூர் மாவட்டம் கத்தாழம்பட்டு கிராமத்தில் காளியம்மன் தேர் பழுதடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை.
தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பழுதடைந்த தேர் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. நேற்று புதிய தேருக்கு பூஜை செய்து வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் என்கிற அப்பநல்லூர் கிராமத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த தேரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
- அருப்புக்கோட்டையில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது.
- வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது. ஏப்ரல் 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது. இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு முத்துமாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி மாத கடைசி வெள்ளியன்று நகரின் முக்கிய பகுதியில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளோட்ட நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்டி ராஜரத்தினம், உதவிச் செயலாளர் முத்துசாமி, சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், முன்னாள் உறவின்முறை தலைவர் மனோகரன், எஸ்.பி.கே. ஆண்கள் பள்ளி செயலாளர் மணி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தேரோடும் வீதிகளை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
- புதிய தேர் வெள்ளோட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நடைபெற உள்ளது. உடுமலை நகர மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம மக்களும் கொண்டாடும் பிரம்மாண்ட தேர்த்திருவிழாவுக்காக புதிய தேர் தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய தேருக்கான வெள்ளோட்டம் நாளை 23-ந்தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி தேரோடும் வீதிகளை தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தேர் செல்லும் வழித்தடத்தில் சாலைகளை சுத்தப்படுத்துதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. மேலும் சதாசிவம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நகராட்சித் தலைவர் மு.மத்தீன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். இந்த நிலையில் சதாசிவம் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகலாகி தேர் செல்வதற்கு இடையூறு ஏற்படும் சூழல் இருந்தது. அதன்படி இந்த வீதியில் உள்ள கடைகளின் முன்புறம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த பந்தல்களை நகராட்சி ஊழியர்கள் பிரித்து அப்புறப்படுத்தினர்.
மேலும் ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுமான ப்பணிகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடைத்து அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய தேர் வெள்ளோட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
- விஷ்ணு,முருகன்,விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும்,120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
- காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெறுகிறது.
உடுமலை:
உடுமலையில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது.எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் இந்த தேர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தேரின் மொத்த உயரம் 12 அடியாக உள்ள நிலையில் தேர்ப்பலகை 9 அடி உயரத்திலும்,உற்சவருக்கான சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.இந்த தேரை உருவாக்குவதற்காக இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், சிவன்,விஷ்ணு,முருகன்,விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும்,120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 14 ந் தேதி நடைபெற்றது.இந்தநிலையில் வருகிற 23 ந் தேதி (வியாழக்கிழமை) புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.அன்று காலை 9.45 மணிக்கு மங்கள இசை,அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெறுகிறது.
நண்பகல் 1 மணிக்கு புதிய தேர் கும்ப ப்ரோக்ஷனம், ஸ்தாபனம்,பலிதானம்,மஹா தீபாராதனை நடைபெறும்.மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனர்.மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற மார்ச் மாதம் 28 ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது. உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 13 ந் தேதி நடைபெறவுள்ளது.
- வருகிற 8-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் ஆய்வு
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட் டுள்ள திருத்தேர் வெள்ளோட்டம் குறித்த பல்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்தினகிரி கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது .
தேர் வெள்ளோட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 30 அடி உயரம் கொண்ட திருந்தேர் வெள்ளோட்டப் பெருவிழா அடுத்த மாதம் 8 - ந் தேதி நடைபெற உள்ளது.
திருந்தேர் வெள்ளோட்ட நிகழ்வுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருக்கோவில் மண்டபத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் பல்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவில் பரம்பரை அறங்காவலர் பால முருகனடிமை சாமிகள் முன்னிலை வகித்தார். செயல் அலு வலர் சங்கர் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-
கோவில் மலையை சுற்றி சுமார் 1 கி.மீ தூரத்திற்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும்.இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கம்பி பாதைகளை தேர்ச்சொல்லும்போது பாதிப்படையாத வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை தேரின் உறுதி தன்மை ஆய்வு செய்து சான்று அளிக்கவும், திருத்தேர் வெள்ளோட்டத்தின் போது தேரில் மின்சாதனங்களை கொண்டு அலங்க ரிக்கும்போது விபத்து ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் வேக தடைகளை அகற்றி எளிதில் அதனை மாற்றி அமைக்கும் வகையில் தடுப்புகளை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜாபேட்டை தாசில்தார் ஆனந்தன், ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் நடைபெறும் பகுதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
- நன்னிலம் அடுத்துள்ள சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.
- இதையடுத்து தேர் பழுதடைந்த நிலையில், நூறு ஆண்டுகளாக தேரோட்டம் நிகழவில்லை.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில், 11-வது வைணவத் திருத்தல மாக விளங்குகிறது.
ஸ்ரீரங்கத்திற்கு இணையான,பாலா அரங்கநாதன் ஆகஇருந்து, அருள்புரியும் திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த தலத்தில், 100 ஆண்டுகளுக்குதேரோ ட்டம் நடைபெற்று இருந்தது. இதையடுத்து தேர் பழுதடைந்த நிலையில், நூறு ஆண்டுகளாக தேரோட்டம் நிகழவில்லை. இந்நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர் புதுப்பிக்கப்பட்டு, 32 அடி உயரத்திற்குஅமைக்க ப்பட்டுள்ளது.
புதுப்பி க்கப்பட்ட தேரின் வெள்ளோ ட்டம் நடைபெற்றதுதேரில் கிருபாசமுத்திர பெருமாள் எழுந்தருளி, முக்கியவீதி வழியாக சென்று,நிலை வந்தடைந்தது. தேரோட்ட த்திற்கு இந்து சமய அறநிலை யத் துறையும், கிராம மக்களும் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் கும்பங்கள் வைக்கப்பட்டன. காலை 9.30 மணி அளவில் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேர் உறையூர் பிரதான ரோடு, டாக்கர் ரோடு, குழுமணி ரோடு வழியாக கோவில் தெருவை சுற்றி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பகல் 11.35 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரை பக்தர்கள் இழுக்கும் போது நமச்சிவாய... சிவ... சிவ... என பக்தி கோஷங்கள் முழங்கினர். தேர் நிலைக்கு வந்ததும் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் கும்பங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தேர் சிறப்பாக நிலையை வந்தடைந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியில் கைதட்டி பக்தி கோஷம் எழுப்பினர். தேர் வெள்ளோட்டத்தையொட்டி திரளான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், தேரை வடம்பிடித்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருவையாறு கீழவீதி, மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய இடங்கள் வழியாக வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேர் வெள்ளோட்டத்தையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், பழனிமுத்து மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை உற்சவம் சப்தஸ்தான விழாவின்போது 9ஆம் நாள் விழவாக தேர்த்திருவிழா நடைபெறும். இதில் ஐயாறப்பர் எழுந்தருளும் பெரியதேர் மிகவும் பழமையானதாகவும் வெயில், மழை போன்ற இயற்கை பாதிப்புகளால் பழுதடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிக கட்டுத்தேர் கட்டப்பட்டு அத்தேரில் ஐயாரப்பரை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு பழுதடைந்த பெரிய தேருக்கு பதிலாக புதிய தேர் கட்ட தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டு 17¾ அடி உயரம் 12.9 அடி அகலத்தில் பழமை மாறாமல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பெரிய தேர் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவுற்றுள்ளது.
இந்த புதிய தேருக்கான வெள்ளோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்குமேல் பூர்ணாகுதி மற்றும் தீபாராதணை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் புனித நீர் நிறைந்த கடம் புறப்பாடும் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்று திருதேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளும் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தருமையாதீன உத்திரவுப்படி ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்